Tuesday, May 15, 2007

இருவர் உள்ளம்

இருவர் உள்ளம்

கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்
நேர்வழியை மாற்றினாள் நேற்றுவரை ஏமாற்றினாள் (கண்ணெதிரே)

பன்னீர்ப் பூப்போன்ற பார்வையும் நெற்றிப்
பரப்பினிலே முத்தான வேர்வையும்
பின்னிவரும் நாணமெனும் போர்வையும் சுற்றிப்
பின்னலிட்ட கூந்தலெனும் தோகையும் கொண்டு இங்கு (கண்ணெதிரே)

என்னை அவளிடத்தில் தருகிறேன் அவள்
இன்னுமென்னை ஏன் வெறுத்து மறைகிறாள்
என்றுமவள் எங்கள் விட்டின் திருமகளாவாள் அந்த
இனிய மகள் எனது தாய்க்கு மருமகளானாள் இன்று (கண்ணெதிரே)

Tuesday, February 20, 2007

வஞ்சிக்கோட்டை வாலிபன்

கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தான்
காதலி என்றென்னை
கொஞ்சியே அழைத்தான் (கண்ணும்)

சபாஷ்! சரியான போட்டி

ஜிலு ஜிலுஜிலுஜிலுவென்று நானே
ஜெகத்தை மயக்கிடுவேனே
கல கலகலகலவென்று ஜோராய்
கையில் வளைவீசும் பாராய்
ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி இனி
அனைவரும் மயங்கிட (ஜிலிஜிலுஜிலு)

ஆறு பெருகிவரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணை யிடலாமோ
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிடக் கனவு காணாதே

சாதுர்யம் பேசாதேடி
என் சதங்கைக்கு பதில் சொல்லடி
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி (நடுவிலே)

ஆடுமயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்ததாயோடி
பாடுகுயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடாதேடி நீ
படமெடுத்து ஆடாதேடி

இன்னொருத்தி நிகராகுமோ எனக்
கின்னொருத்தி நிகராகுமோ
இடி இடித்தால் மழையாகுமோ பேதைப்பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ

மின்னலுக்கு அஞ்சேனடி வீண்வாதமென்ன
முன்னே வந்து நீ ஆடடி - இந்த (மின்னலுக்கு)

Monday, February 19, 2007

சபாஷ் மீனா - சித்திரம் பேசுதடி

சித்திரம் பேசுதடி - உன்
சித்திரம் பேசுதடி - என்தன்
சிந்தை மயங்குதடி (சித்திரம்)

முத்துச் சரங்களைப்போல்
மோஹனப் புன்னகை மின்னுதடி (சித்திரம்)

தாவும் பொதிமேலே - ஒளிர்
தங்கக்குடம்போலே
பாவையுன் பேரெழிலே என்தன்
ஆவலைத் தூண்டுதடி (சித்திரம்)

என் மனம் நீயறிவாய் - உன்தன்
எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப்போல் மௌனம்
ஏனடி தேன்மொழியே (சித்திரம்)

Saturday, February 17, 2007

உத்தம புத்திரன்

ஹா, யாரடீ நீ மோஹினி, கூறடி என் கண்மணி
ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ
ஆட ஓடிவா காமினி

தேன் வேண்டுமா?
தேன் வேண்டுமா? நான் வேண்டுமா?
தீராக்காதல் மாறுமா
தேவகானமே பாடி ஆவல் தீரவே ஆடி
பேரின்பந்தான் காண்போம் வா மன்னவா (தேன்)

திராட்சையின் தேன்சாறடி மோட்சமே நீதானடி
ரம்பைபோல நீயே ஆடுகின்ற மாதே
மேலும் மேலும் நீ ஆடடி (யாரடீ)

மன்மதா நீ ஓடிவா, அன்புடன் நீ ஆடிவா
மின்னல் போலத் துள்ளி உந்தன் நெஞ்சை அள்ளி
இன்பவல்லி நானாடவா (மன்மதா)

காதலி நீ தானடி சோகமே ஆகாதடி
மீறுகின்ற போதை ஏறுகின்ற போதே
மேலும் மேலும் நீ ஊற்றடி

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
உன்மேல் ஆசை உண்டு
ரெண்டும் மூணும் அஞ்சு
என்னை நீயும் கொஞ்சு
மன்னாதி மன்னா சின்னக்
கன்னி எந்தன் கன்னம்
மயக்கும் மதுக்கிண்ணமே
கண்ணால் என்னை கண்டாலே
உந்தன் உள்ளம் துள்ளூம்
தன்னாலே போதை கொள்ளுமே
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு ஹாஹாஹஹா
உன்மேல் ஆசை உண்டு ஹாஹாஹஹா

நானும் நீயும் நல்ல ஜோடி
தேனும்பாலும் போலக்கூடி
ஆசையாலே ஆடியாடி
ஆசையாலே ஆடியாடி
காதலாலே போதையேறி
போதையாலே பாதைமாறி வாழவே
ஓடி நீ இங்குவா லாபமேது நஷ்டமேது
மானமேது ஈனமேது ஆணுமேது பெண்ணுமேது
நன்மை தீமை ஏது தன்
மானமேது ஈனமேது
மாறா தீரா வீரா நீயே வாராய்

அன்பே என்னன்பே அன்பே ஹாஹாஹா
என்னன்பே ஹாஹாஹா
என்னன்பே வா ஓஹோஹோ
என்னன்பே நீ வா, ஹ, பண்பாடும் என்னன்பே நீ வா